Sunday, 7 October 2012

விவசாயி.....







விவசாயி
நவீன தேசமே....
 
இந்த தேசத்தின் பெரும்பான்மையானவர்கள் நாங்கள்
இன்று சிறுபான்மையாகிப்போகலாம் 
 
தேசம்,இனம், மொழி, மதங்களை கடந்து
எங்களை ஒருங்கிணைத்த நதிகள்
இன்று எங்களை பிரித்தாளும் காரணிகளாகிப்போகலாம்
 
கழனிகள் செழித்த தேசம் 
இன்று கணினி தேசமாகிப்போகலாம்
 
அன்னமிட்ட காணியெல்லாம் 
இன்று அந்நிய செலவாணி ஈட்டும் காலணிகளாகிப்போகலாம்
 
உலக பொருளாதாரம் எங்களை பற்றி 
விவாதித்தபோதிலும் 
 உங்கள் ஊடகங்கள் எங்கள் வாழ்வியல் 
போராட்டங்களை காட்சிபடுத்தியபோதிலும்
நீங்கள் எங்களை கடந்து போகலாம் 
 
நிச்சயம் ஒரு நாள் உங்கள் இரைப்பை
எங்களை உங்களுக்கு நினைவூட்டும்     
 
தாழ்ந்தாலும் எரிவோம்
எரிதழலாய்....
வீழ்ந்தாலும் வாழ்வோம் 
விதையாய் 
ஏனெனில் ...
விதைத்து பழகியவர்கள் நாங்கள்.

No comments:

Post a Comment