Sunday, 7 July 2013

நீ பிரிந்து போனதும் பொய்தான்...

 
 
 
 
 
 
நீ பிரிந்து போனதும் பொய்தான்...

என்னை மறந்து போனதும் பொய்தான்...

இதை யாரிடம் நான் கூறுவேன்


நீ என்னை சேர்ந்திட வருவாய்...

நான் சுமக்கும் காதலை பெறுவாய்...

என நம்பிதான் நான் வாழ்கிறேன்.....


ஓடி மறைவது எதற்கு

என் உயிரில் உறைந்தது எதற்கு

மண்ணில் பிறந்தது எதற்கு

நீ என்னில் கலக்கணும் அதற்கு

யாசகம் கேட்க்கிறேன்

காதல் நீ கொடு...

இல்லையேல் என்னை நீயே கொன்றிடு....


மண் மேலே காதல் கொண்டால் பெரும் குற்றமா..?

காதல்தான் இல்லை என்றால் பூமி சுற்றுமா..?


நீ மட்டும் தனியே சென்றால் சுயம்தானடி

நான் மட்டும் வாழ்ந்திட இங்கே பயம்தானடி


துடிக்காமல் வாழும் இதயம்

நான் உணர்கிறேன்...

மௌனமே பாசையாய் மாறிபோனது

வேதனை தலைக்குமேல் மீறி போனது


No comments:

Post a Comment