Monday, 29 July 2013

மாமன் தொட்ட பூந்தேரே....




சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
தென்னங்கிற்றில் ராகம் தேடும் தெம்மாங்க
கதை பேசும் கண்ணோடு
கலங்காதே பெண் மானே
துணை நானே பொன் மானே

காக்கை சிறகிலே தீண்டி கதைகள் நூறு கூறவா
பாசம் வைத்த பால் நிலாவை கையில் நானும் ஏந்தவா
மாமன் தொட்ட பூந்தேரே
மனதில் நீயும் ஏங்காதே

ஏக்கத்தோடு நீ போனால் ஏழை நெஞ்சு தாங்காதே
நீயும் வாழத்தானே..... நானும் வாழ்கிறேனே.....
வீசும் தென்றலே.... பேசு தென்றலே....

வாழை நாரிலே தாலி போட்ட காலம் வேறம்மா
சாமி சாட்சியாக நானும் தந்த வாக்கு மாறுமா
நாணத்தோடு பூச்சூடி நாளும் எந்தன் பேர் பாடி
ஆடி பாடும் காத்தடி மறந்ததென்ன ஆத்தாடி
தேடி தேடித்தானே.... நானும் வாழ்கிறேனே....
வீசும் தென்றலே.... பேசு தென்றலே...

Sunday, 7 July 2013

நீ பிரிந்து போனதும் பொய்தான்...

 
 
 
 
 
 
நீ பிரிந்து போனதும் பொய்தான்...

என்னை மறந்து போனதும் பொய்தான்...

இதை யாரிடம் நான் கூறுவேன்


நீ என்னை சேர்ந்திட வருவாய்...

நான் சுமக்கும் காதலை பெறுவாய்...

என நம்பிதான் நான் வாழ்கிறேன்.....


ஓடி மறைவது எதற்கு

என் உயிரில் உறைந்தது எதற்கு

மண்ணில் பிறந்தது எதற்கு

நீ என்னில் கலக்கணும் அதற்கு

யாசகம் கேட்க்கிறேன்

காதல் நீ கொடு...

இல்லையேல் என்னை நீயே கொன்றிடு....


மண் மேலே காதல் கொண்டால் பெரும் குற்றமா..?

காதல்தான் இல்லை என்றால் பூமி சுற்றுமா..?


நீ மட்டும் தனியே சென்றால் சுயம்தானடி

நான் மட்டும் வாழ்ந்திட இங்கே பயம்தானடி


துடிக்காமல் வாழும் இதயம்

நான் உணர்கிறேன்...

மௌனமே பாசையாய் மாறிபோனது

வேதனை தலைக்குமேல் மீறி போனது