Monday, 6 December 2010

துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே இனியும் உனைப்போல......


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

வெள்ளி நிலா வான வெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்த தம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்ல மொழி கேட்டதம்மா
ஒரு மாற சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால் முகம் மறக்காமல் தடுமாறும்
சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும் 

 
தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன
துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை எது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும் 

Friday, 19 November 2010

விளைவுகள் தெரியாமல் விதைக்கப்பட்ட விதை....






















நிமிடங்கள் அழகானது உனது அருகாமையால்

நொடிகள் ஓவொன்றும் சுமையானது உனது பிரிவால்

இரவின் மடியில் இதய திரையில் தவழ்ந்த கனவுகள்

இமைகளின் விளிம்பில் கண்ணீர் துளிகளாய்

இமையது துயிலை துறந்தது

இதழ் அது புன்னகையை மறந்தது

விளைவுகள் தெரியாமல்

விதைக்கப்பட்ட விதை....

காதல்....

Saturday, 8 May 2010

நாள்தோறும் ரசிகன்.....

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே


என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்


சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே


வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே..



கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்....

உனை தேடிய பயணத்தில்....



உனை தேடிய பயணத்தில்



உயிர் வலித்த நொடிகள் ஏராளம்

 
உறக்கம் தொலைத்த இரவுகள் ஏராளம்

அத்தனையும் எண்ணில் அடங்காது

ஆயினும்,

அரிதாய் சில உன்னத நொடிகள்

உயிர்  கொண்ட நேசத்திற்கு

உறமிட்ட நொடிகள்.

உன் கரம் பற்றி

இல்லறம் கண்டு

நல்லறம் பயிலவே யாசிக்கிறேன்

உனை விடுத்து என் உயிர் அது

என்னில் அடங்காது

என் உயிரே....

உலகை பிரிவேன்...

ஆயினும்,

உனை பிரியேன்...

Sunday, 21 March 2010

உடைந்தபோதும் உயிர்த்தேன்...






 

உளி தந்த காயங்களெல்லாம்

சிற்ப்பமாய் மண்ணில்

நீ தந்த காயங்களெல்லாம்

கவிதைகளாய் என்னில்...

Saturday, 13 February 2010

வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்



பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு..

காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது

காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது

வேரும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய்

விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்

விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய்

வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய்

அறியாமல் பிழை செய்தாய்

மணலாலே சிலை செய்தாய்

அடி பாரதி கண்ணம்மா

மனம் கலங்குவதேனம்மா


வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்

வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்

இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்

இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்

இளம் பூவே வருந்தாதே

உலகம்தான் திருந்தாதே

அடி பாரதி கண்ணம்மா

நீ பாரத பெண்ணம்மா....

இது பாழ் பட்ட மண்ணம்மா

Thursday, 11 February 2010

நிஜம் புரியாத நிலை அடைந்தேன்........

கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…

பார்வை உன்னை அலைகிறதே,

உள்ளம் உன்னை அனைக்கிறதே…

அந்த நேரம் வரும் பொழுது,

என்னை வதைகின்றதே…

கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…


சாரல் மழை துளியில்,

உன் ரகசியத்தை வெளிபார்தேன்…

நாணம் நான் அறிந்தேன்,

கொஞ்ஜம் பனி பூவாய் நீ குருக…

எனை அறியாமல் மனம் பறித்தாய்,

உன்னை மரவேனடி…

நிஜம் புரியாத நிலை அடைந்தேன்,

எது வரை சொல்லடி..

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…

கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…


தேடல் வரும் பொழுது,

என் உணர்வுகளும் கலங்குதடி…

காணலாய் கிடந்தேன்,

நான் உன் வரவால் விழி திறந்தேன்

இணை பிரியாத நிலை பெறவே,

நெஞ்சில் யாகமே

தவித்திடும் பொது ஆறுதலாய் உன்மடி சாய்கிறேன்…

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்…


கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

பார்வை உன்னை அலைகிறதே,

உள்ளம் உன்னை அனைக்கிறதே…

அந்த நேரம் வரும் பொழுது,

என்னை வதைகின்றதே…


கனவெல்லாம் நீதானே,

விழியே உனக்கே உயிரானேன்…

நினைவெல்லாம் நீதானே,

கலையாத யுகம் சுகம் தானே…

Thursday, 4 February 2010

நேசத்தில் பிறந்தவளுக்கு....

நேசத்தில் பிறந்தவளே...

நான் நேசிக்க பிறந்தவளே....

என் கவிதைகள் உன்னோடு கொண்ட நேசத்தில் பிறந்தவை

அவை உன்னை சேராமல் யாரிடம் சேரும்

என் அழகே நீ இன்றி

உள்ளத்தில் அமைதி இல்லை

இமைகளில் உறக்கம் இல்லை

இதழ்களில் புன்னகை இல்லை

என்றாவது ஒரு நாள்........

என் வானிலும் விடியல் வரும்

என்று காதிருக்கிறேன் உனக்காக.....

Friday, 29 January 2010

என் இரண்டாம் தாயே....

சகியே...
மணநாளில்
பெற்றவர்கள் தான் பெற்ற பிள்ளை செல்வத்தை
கன்னிகாதானம் செய்வார்கள்

ஆனால் இங்கோ
நீ பெற்ற என் காதல் செல்வத்தை
என்னை பெற்றவர்களுக்காக தாரைவார்க்க இசைந்தாயே...
என் இரண்டாம் தாயே....

உனக்காக என் காகிதங்கள் கவிதைகள் படித்ததில்லைதான்..
ஆனால் என் கருவிழிகள் அது கண்ணீர் வடிக்கிறதே...
சாதி என்ற சமூக சுட்சமத்தின் சதியை எண்ணி

கடவுள் என்பவன் கல்லில் இல்லை
என்பதைக்கூட பகுத்தறிந்தேன்

ஆனால், காதல் என்னும் விடுகதைக்கு
விடை தேட முற்பட்டும் முடியவில்லை
விதி என்று விட்டுபோகவும் மணமில்லை

தொடர்ந்து பயணிக்குறேன்...
காலத்தின் போக்கில்...

என் கனவுகள் நிஜமாகுமா..?
என் கவிதைகள் உனை சேருமா..?

உன் நினைவுகளுடனான எனது பயணம்.........

என் சரிரத்தில் உதிரமாய் என்னில் பயணிப்பவளே...

உன் நினைவுகளுடனான எனது பயணம்

என் ஆயுள் உள்ள வரை என்றாலும்...

உன்னோடு நான் கொண்ட உரையாடல் பயணம்

அது சிலகாலம் மட்டுமே...

ஆதலே...

உன்னோடு நான் பயணிக்கும்

ஒவ்வொரு நொடிகளையும்

ஆத்மார்த்தமாய் வாழ்கிறேன்....

வழித்துணையாய் நீ இருந்தால்.......

துயரங்கள் என்னை தொடும்போதெல்லாம்

தூயவளே உன் துணை தேடி வருகிறேன்

வழித்துணையாய் நீ இருந்தால்

வாழ்வின் எத்தகைய துயரங்களையும் கடந்திடுவேன்

ஆனால்....

உன் பிரிவென்ற மீளா துயரத்தில்

என்னை வீழ்த்திடாதே.....

தொலையாத நினைவுகளின் தேடல்.......

நேசித்து பார் கவிதை வரும்

பிரிந்து பார் சோகம் வரும்

நினைத்து பார் அழுகை வருமுன்னு சொன்னாங்க...


ஆம்

என் மழலை மொழியே....

உன்னை நேசித்தேன்

உனக்காய் சில கவிதைகளை கருத்தரித்தேன்...

துணையாய் நேசித்த நீ என்னை பிரிந்தபோதே

உன்னோடு நான் கொண்ட நேசத்தை உணர்ந்தேன்

நீ இல்லாத நிமிடங்களை கண்ணீரில் கரைத்தேன்

தொலையாத உன் நினைவுகள்

உன்னிடம் தொலைந்த என்னை தேடுதே....

என் மழலை கவிதையே.........

என் மழலை கவிதையே

என்னை கொண்டவளும் நீதான்

என்னை கொன்றவலும் நீதான்

என் வாழ்க்கை பயணத்தை

உன்னோடு பயணிக்கவே விரும்பினேன்,

ஆனால் நீயோ...

உன் நினைவுகளோடு பயணிக்க என்னை பனித்துவிட்டது ஏனோ.... ?

நேசத்தின் வண்ணங்கள்....

என்னை வசிகரித்த மழலை கவிதையே...

என் தோட்டத்திற்கு வந்து பார்

உனக்கான என் நேசத்தின் வண்ணங்கள் அங்கே மலர்களாய்...

என்னவளே...

அவை காகித பூக்கள் அல்ல

அவற்றுக்கு என் மனம் சொல்லும் மணம் உண்டு

ஆம் அன்பே...

என் சுவாசத்தில் கலந்திட்ட உன்னோடு

என் உயிர் கொண்ட நேசத்தை சொல்லும்...

கடந்து போன தென்றல் அது கடைசியாய் விட்டுபோன தடையம்...

கண்ணம்மா... கண்ணம்மா....

பதில் சொல்லம்மா.. பதில் சொல்லம்மா...

என்னம்மா... என்னம்மா...

பாசம் வச்சதே ஒரு குத்தமா..?



உன்னை எண்ணி பாக்காமலே விட்டுதந்தேனே

என் காதலைத்தான் இப்ப நான் தத்து தந்தேனே

உன் கூரையிலே நானும் வாழ ஆசைபட்டேனே

ஒரு பாசத்துக்கு நானும் வாழ ஆசைபட்டேனே

என் காதல் ஒரு காத்தாடியாய் துள்ளி வந்ததே

அது பாசம் எனும் கம்பத்திலே மாட்டிகிட்டாதே

நான் பட்ட கடன் தீர்க்க இப்போ நேரம் வந்தததே

அந்த நேரத்தில நம்ம காதல் ஓரம் போனதே

யாரோட சாபம் வாளாய் மாறி நம்ம

ரெண்டுபேரு நெஞ்ச குத்திக் கொல்லுதே



குத்தமா..? குத்தமா..?

ஆசை வைச்சதே ஒரு குத்தமா..?

ஒத்த வார்த்தை கேக்கும்போதே செத்துபோனேனே

நான் ஓடி வந்து நிக்கும் போதே சாம்பல் ஆனேன

உன்னை பார்த்து என்னன்னெமோ கேக்க வந்தேனே

என் வார்த்தை எல்லாம் தொலைஞ்சு இப்ப ஊமை ஆனேன

என் காதல் தேறும் தேரடியை சேரவில்லையே

உன் காலடியில் நொறுங்கிபோச்சு தேறவில்லையே

என் தூக்கத்துக்கு மருந்து எங்கு இருக்கு

அடி திக்கி திக்கி பேசும் உன் கண்ணில் இருக்கு

யார் செஞ்ச பாவமோ பாம்பாக மாறித்தான்

நம்ம ரெண்டுபேரு காலைசுத்தி கிடக்கு

கண்ணம்மா... கண்ணம்மா....

பதில் சொல்லம்மா.. பதில் சொல்லம்மா...

என்னம்மா... என்னம்மா...

பாசம் வச்சதே ஒரு குத்தமா..?