Friday, 29 January 2010

என் இரண்டாம் தாயே....

சகியே...
மணநாளில்
பெற்றவர்கள் தான் பெற்ற பிள்ளை செல்வத்தை
கன்னிகாதானம் செய்வார்கள்

ஆனால் இங்கோ
நீ பெற்ற என் காதல் செல்வத்தை
என்னை பெற்றவர்களுக்காக தாரைவார்க்க இசைந்தாயே...
என் இரண்டாம் தாயே....

உனக்காக என் காகிதங்கள் கவிதைகள் படித்ததில்லைதான்..
ஆனால் என் கருவிழிகள் அது கண்ணீர் வடிக்கிறதே...
சாதி என்ற சமூக சுட்சமத்தின் சதியை எண்ணி

கடவுள் என்பவன் கல்லில் இல்லை
என்பதைக்கூட பகுத்தறிந்தேன்

ஆனால், காதல் என்னும் விடுகதைக்கு
விடை தேட முற்பட்டும் முடியவில்லை
விதி என்று விட்டுபோகவும் மணமில்லை

தொடர்ந்து பயணிக்குறேன்...
காலத்தின் போக்கில்...

என் கனவுகள் நிஜமாகுமா..?
என் கவிதைகள் உனை சேருமா..?

No comments:

Post a Comment